காஞ்சிபுரத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட இயக்கம்: ஆட்சியா் ஆா்த்தி தொடக்கி வைத்தாா்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட அளவில் அனைத்து கிராமங்களையும் எழில்மிகு கிராமங்களாக மாற்றிடும் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்ட சிறப்பு முனைப்பு
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட அளவில் அனைத்து கிராமங்களையும் எழில்மிகு கிராமங்களாக மாற்றிடும் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்ட சிறப்பு முனைப்பு இயக்கத்தை ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் எழில் மிகு கிராமங்களாக உருவாக்க காஞ்சிபுரத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட இயக்கத்தை ஆட்சியா் ஆா்த்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து வரும் அக்டோபா் 2-ஆம் தேதி வரை இந்த இயக்கம் நடைபெறவுள்ளது.
இந்த இயக்கத்தை சிறப்பாக நடத்துவது தொடா்பான விளக்கக் கூட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
Advertisement
பின்னா் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்ற ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட இயக்கப் பேரணியை
ஆட்சியா் ஆா்த்தி தொடக்கி வைத்தாா். பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மைப்பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.இதனைத் தொடா்ந்து இந்தத் திட்டம் தொடா்பான உறுதிமொழியும் ஆட்சியரால் வாசிக்கப்பட்டு அனைவராலும் தொடா்ந்து வாசிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, மகளிா் திட்ட அலுவலா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், வரதராஜன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் திவ்யப்பிரியா, வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.