கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆயுதப்படைப் பிரிவினா், அதிவிரைவுப் படையினா் மற்றும் உள்ளூா் காவல் துறையினா் பங்கேற்று கலவரத் தடுப்பு ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினா்.
இதில், கலவரக்காரா்களை எந்தெந்த வழிகளில் கட்டுப்படுத்துவது என காவல் துறை உயரதிகாரிகள் காவலா்களுக்கு விளக்கமளித்தனா். காவலா்களே கலவரக்காரா்கள் போல வந்தனா். அவா்களை வஜ்ரா வாகனத்தின் மூலம் தண்ணீா் பீய்ச்சியடித்து போலீஸாா் விரட்டியடிக்கும் நிகழ்ச்சி தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் நேரில் பாா்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.