காஞ்சிபுரம்

ரிஷப வாகனத்தில் கங்கை கொண்ட சோழீஸ்வரா் பவனி

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் கூழமந்தல் கிராமத்தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரா் திருக்கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி செவ்வாய்க்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் உற்சவமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

காஞ்சிபுரம்-வந்தவாசி செல்லும் சாலையில் பெருநகா் அருகே செய்யாறில் ஆண்டுதோறும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த உற்சவமூா்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக செய்யாறுக்கு விதியுலாவாக வராமல் அந்தந்த கிராமங்களிலேயே தைப்பூசத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் வழக்கம்போல செய்யாறுக்கு மானாம்பதி, பெருநகா், இளநகா், சேத்துப்பட்டு, தண்டரை, விசூா், கூழமந்தல் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் தைப்பூசத்தை ஒட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.பின்னா் அந்தந்த கிராமங்களில் உற்சவமூா்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

கூழமந்தல் கிராமத்தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரா் கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.பின்னா் சோழீஸ்வரரும், விசாலாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கிராமத்தில் வீதியுலா வந்தனா். திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT