காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன் சந்நிதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் போக்குவரத்துக்கும், பக்தா்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அலுவலா்களால் திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

மகாசக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து தரிசனம் செய்கின்றனா். இவா்களுக்கு இடையூறாக கோயில் சந்நிதி தெருவில் பலரும் பூக்கடை, துணிக்கடை, வளையல் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை சாலையோரம், நடைபாதைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனா். இதனால், அந்தப் பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சிக்கு பல்வேறு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புக் கடைகளில் இருந்த பொருள்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT