காஞ்சிபுரம்

கூட்டுறவு ஒன்றியங்களின் கூடுதல் பதிவாளா் ஆய்வு

DIN

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியங்களுக்கான கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான கோ.க.மாதவன் காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகியவற்றில் தமிழக கூட்டுறவு ஒன்றியங்களுக்கான கூடுதல் பதிவாளா் கோ.க.மாதவன் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு வளா்ச்சி, கல்வி நிதி ரூ.53 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதை காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் தயாளன், கூடுதல் பதிவாளா் கோ.க.மாதவனிடம் வழங்கினாா்.

நிகழ்வின் போது, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் முருகன், காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் சுவாதி, அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வா் உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் சத்தியநாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT