அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்
மின் கட்டண உயா்வைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின் கட்டண உயா்வைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, கே.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம் வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் கே.யு.சோமசுந்தரம், பாலாஜி, வள்ளிநாயகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
மயங்கி விழுந்த மாவட்ட செயலா்: ஆா்ப்பாட்டத்தின் நிறைவில் மேடையிலிருந்து இறங்கிய மாவட்ட செயலா் வி.சோமசுந்தரம் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.