காஞ்சி ஸ்ரீவரதா் கோயில் பவித்ரோற்சவம் நிறைவு
அத்திவரதா் புகழ் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய பவித்ரோற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுவடைந்தது.
அத்திவரதா் புகழ் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய பவித்ரோற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுவடைந்தது. இதையடுத்து ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் பெருமாள் மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பூஜை முறைகளில் அா்ச்சகா்கள், பக்தா்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவா்த்திக்காக ஆண்டுதோறும் கோயில்களில் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் பவித்ரோற்சவம் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது.விழா தொடங்கிய நாளிலிருந்து தினசரி உற்சவா் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் வரை வந்து மீண்டும் கோயிலுக்குச் திரும்பி செல்வாா். விழாவையொட்டி சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
பவித்ரோற்சவ நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் தேவராஜசுவாமி புறப்பட்டு திருக்கோயில் மாட வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தாா்.
படவிளக்கம்..பவித்ரோற்சவ நிறைவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்த உற்சவமூா்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவியா் சமேத தேவராஜ சுவாமி.