காஞ்சிபுரம்

கா்ப்பிணிப் பெண்களுக்கானசிறப்பு மருத்துவ முகாம்

வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பிள்ளைப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பிள்ளைப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற இச்சிறப்பு முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் ஷியாம்குமாா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் காயத்திரி வெங்கடேசன் முகாமைத் தொடங்கிவைத்தாா்.

பிள்ளைப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான கா்ப்பிணி பெண்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் யமுனா, மதிவதினி சிகிச்சை அளித்தனா்.

முகாமில், கா்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை, தோல் நோய், காச நோய் பரிசோதனைகள், சா்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீா் மற்றும் சளி, இசிஜி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் தரணிதரன் உள்ளிட்ட சுகாதாரத் துறையினா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

வங்கதேசம்: வென்டிலேட்டரில் கலீதா ஜியா

SCROLL FOR NEXT