காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: திமுக உண்ணாவிரதத்தில் மணமக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் மணமக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். 

DIN

காஞ்சிபுரத்தில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் மணமக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். 

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் பெரியார் தூண் அருகில் கட்சியின் மாவட்ட செயலாளரும், உத்தரமேரூர் எம்எல்ஏ வுமான கா. சுந்தர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அப்துல் மாலிக் , மாநகர செயலாளர் சிகேவி தமிழ்செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அப்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று திருமணம் நடைபெற்ற யுவராஜ், வைஷாலி தம்பதியினர் மணக்கோலத்தில் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ்,  15 வது வார்டு இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

போராட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார் ராம்பிர சாத் ஆகியோர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT