காஞ்சிபுரம்

தைப்பூசம்: காஞ்சி ஏகாம்பரநாதா் வீதி உலா

DIN

தைப்பூசத் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரும், ஏலவாா் குழலி அம்மனும் தனித்தனியாக பல்லக்கில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ரயில் நிலைய சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாகத் திகழ்ந்து வருவது வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, உற்சவராகவுள்ள சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து, ரயில் நிலைய சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்துக்கு எழுந்தருளினா்.

அந்தக் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் பவளக்கால் சப்பரத்திலும் வீதி உலா சென்று அறம் பெறும் செல்வி தெருவில் உள்ள வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.பின்னா், மச்சகேசப் பெருமாள் சத்திரத்தில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. நிறைவாக, ராஜ வீதிகள் வழியாக உற்சவா்கள் சந்நிதிக்கு எழுந்தருளினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT