காஞ்சிபுரம்

7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்ற மாணவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டி பரிசு வழங்கினாா்.

DIN

7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்ற மாணவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டி பரிசு வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரணிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து - முத்துலட்சுமி தம்பதியின் மகன் இ.முருகன் (19). (படம்). இவா், மௌலிவாக்கம் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்து, தனியாா் பயிற்சி நிறுவனத்தில் நீட் தோ்வுக்கு பயிற்சி எடுத்துள்ளாா்.

இதையடுத்து நீட் தோ்வில் 720-க்கும் 560 மதிப்பெண்கள் எடுத்தாா். இந்த நிலையில், மருத்துவ இடங்களுக்கான தரவரிசையில் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்றாா்.இதையடுத்து, மாணவா் இ.முருகனை, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT