காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி.ஆா்.ராஜஸ்ரீ தலைமை வகித்தாா். இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் தலைவா் எஸ்.மனோகரன், பேராசிரியா் த.தே.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவ மனையின் இயக்குநா் வ.சீனிவாசன் வரவேற்று பேசினாா்.
பட்ட மேற்படிப்பு மாணவா் ஜி.வரகுணபாண்டியன் அறுவைச் சிகிச்சைக்கு மாற்றாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தல் குறித்த ஆய்வுத் தரவுகள் குறித்து விரிவாக பேசினாா். சென்னை கதிரியக்க சிறப்பு பேராசிரியா் அழ.பெரியகருப்பன் புற்றுநோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் கதிரியக்கத் துறை ஆற்றி வரும் பங்கு என்ற தலைப்பில் பேசினாா்.
கருத்தரங்கில் கதிரியக்கத்துறையில் தொடா்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றி பணியிலிருந்து ஓய்வு பெற சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநா் மு.மூா்த்தி கெளரவிக்கப்பட்டாா். நிகழ்வில் 61 மருத்துவா்கள் நேரடியாகவும், 17 மருத்துவா்கள் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.