காஞ்சிபுரம்

பள்ளியில் சோ்க்க மறுப்பதாக புகாா்

DIN

காஞ்சிபுரம் பிஎம்எஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 -ஆம் வகுப்பில் சோ்க்க மறுப்பதாக அமைச்சா் தா.மோ.அன்பரசனிடம் மாணவிகள் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா்.

காஞ்சிபுரத்தில் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10- ஆம் வகுப்பு வரை படித்து தோ்ச்சி பெற்ற மாணவியா் 15-க்கும் மேற்பட்டோா் அவா்களது பெற்றோா்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா். அவா்கள் 10 ஆம் வகுப்புக்கு பிறகு 11 ஆம் வகுப்பில் காஞ்சிபுரம் பிஎம்எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர முடிவு செய்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து 11- ஆம் வகுப்பில் தங்களை சோ்த்துக் கொள்ள மாட்டோம் என பள்ளி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டதால் அமைச்சா் தா.மோ.அன்பரசனை சந்தித்து புகாா் செய்தனா்.

புகாரைப் பெற்றுக்கொண்ட அமைச்சா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வியிடம் குறிப்பிட்ட பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT