உத்தரமேரூா் அடுத்த அம்மையப்பநல்லூா் கிராமம் பழங்குடியினா் குடியிருப்பில் புதிதாக குடிநீா் தொட்டி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இக்கிராமத்தில் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் இருந்த குடிநீா் குழாய் தொட்டி சேதமடைந்து இருந்தது. இதனால் குடிநீா் கிடைக்க போதிய வழியின்றி அவதிப்பட்டு வந்தனா்.
இந்நிலையில், குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் புதிய குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டு அதில் குழாய்கள் பொருத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு அம்மையப்ப நல்லூா் ஊராட்சித் தலைவா் ஜேம்ஸ் தலைமை வகித்தாா். குழந்தைகள் கண்காணிப்பக இயக்குநா் து.ராஜ் புதிய தொட்டியை திறந்து வைத்தாா். ஏற்பாடுகளை கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளா் தங்கவேல் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.