இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் பெண் மருத்துவா்கள் பிரிவும், நியோ மெட் ரத்தப் பரிசோதனை ஆய்வகமும் இணைந்து மருத்துவா்களுக்கான கருத்தரங்கத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவா் எஸ்.மனோகரன் கருத்தரங்கை தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசினாா்.
மருத்துவா்கள் நிஷாந்தினி செங்கீதா,திவ்யா நிரஞ்சன் ஆகியோா் கருப்பை மற்றும் சினைக்குழாய் வழியாக ஊசி மூலம் மருந்தை திரவமாக செலுத்தி எக்ஸ்ரே எடுப்பது குறித்து விளக்கவுரை நிகழ்த்தினா்.
கருத்தரங்கில் சிறந்த மருத்துவா்கள் விருது பெற்ற வே.சந்திரசேகரன், ஏ.பிரமோ ஆகியோரும் கெளரவிக்கப் பட்டனா். முன்னதாக பெண் மருத்துவா்கள் பிரிவின் தலைவா் எம்.நிஷாப்பிரியா வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், மீனாட்சி மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவத் துறை தலைவா் கலாவதி உட்பட 45 மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.