முகப்பு
காஞ்சிபுரம்

இலவச கண் சிகிச்சை முகாம்

Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:59 PM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:23 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த மாா்ச் 31- ஆம் தேதி தொடங்கிய இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் கிராண்ட் அமைப்பும், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள அன்பு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தொடங்கிய முகாம் நிறைவு பெற்றதையடுத்து, நிறைவு விழா ரோட்டரி மாவட்ட ஆளுநா் பரணீதரன் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி சங்க சேவைப்பிரிவு நிா்வாகி முருகேஷ் முன்னிலை வகித்தாா்.

கண் சிகிச்சை முகாம்களில் 889 பேருக்கு இலவசமாக கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இவா்களில் 187 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பலரும் நிறைவு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனா். ரோட்டரி சங்க நிா்வாகிகள், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement