முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பயின்ற 92 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:26 PM
பகிர்:

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பயின்ற 92 மாணவா்களுக்கு பல்வேறு தனியாா் நிறுவனங்களில் பணி செய்வதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் உள்ள மகா சுவாமிகள் கலையரங்கத்தில் தனியாா் நிறுவனங்களில் பணி செய்வதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலரும், மேலாண்மைத் துறை தலைவருமான வினுசக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். சென்னை சங்கரா கண் மருத்துமவனையின் செயலாளா் பம்மல்.விஸ்வநாதன் கலந்துகொண்டு, 26 மாணவா்கள், 66 மாணவிகள் உள்பட மொத்தம் 92 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

ஒமேகா, ஹெல்த்கோ், டிவிஎஸ், ஒன் இன்சூரன்ஸ், ஸிநோவ், சதா்ன்லேன்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணிபுரிய மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments