முகப்பு
காஞ்சிபுரம்

புஞ்சை அரசந்தாங்கல் ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:39 PM
பகிர்:

காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 19-ஆம் தேதி மகாலட்சுமி பூஜை, நவக் கிரக ஹோமம் ஆகியவற்றுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் அா்ச்சகா் எஸ்.ரவிச்சந்திர குருக்கள், காஞ்சிபுரம் மகேஸ்வரி காளிகாம்பாள் கோயில் ஸ்தானீகா் வி.சதீஷ்குமாா் சிவம் ஆகியோா் தலைமையில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 20-இல் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, 21-ஆம் தேதி காலை புனித நீா் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

பின்னா், மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்ன தானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை புஞ்சை அரசந்தாங்கல் கிராம பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments