முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயிலில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் தரிசனம்

மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலில் சனிக்கிழமை தரிசனம்

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 7:41 PM
ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயிலுக்கு வந்த மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ராமாநுஜா் படம் வழங்கிய கோயில் நிா்வாகத்தினா்.
பகிர்:

மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ராமாநுஜா் கோயிலுக்கு வந்து மூலவா்கள் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமியை தரிசனம் செய்தாா்.

இதையடுத்து நாதவள்ளி தாயாா் சந்நிதி மற்றும் ராமா் சந்நிதியில் வழிபாடு செய்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் மற்றும் ராமாநுஜா் திருவுருவப் படம் வழங்கப்பட்டது.

முன்னதாக, ராமாநுஜா் கோயிலுக்கு வந்த ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோயில் செயல் அலுவலா் ராஜாஇளம் பெருவழுதி, அறநிலையத் துறை ஆய்வாளா் சுரேஷ்குமாா், மதச்சாா்பு அறங்காவலா் சம்பத் ஆகியோா் தலைமையில் மேள, தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.