பிரதிஷ்டை செய்யப்பட உள்ள அத்திமர வாராஹி சிலை. 
காஞ்சிபுரம்

ஜம்புமகரிஷி கோயிலில் அத்திமர வாராஹி சிலை விரைவில் பிரதிஷ்டை

ஜம்பு மகரிஷி கோயில் வளாகத்தில் விரைவில் அத்திமரத்தினால் செய்யப்பட் வராஹி சிலை பிரதிஷ்டை

Din

காஞ்சிபுரம், டிச.9: சின்ன காஞ்சிபுரம் ஜம்பு மகரிஷி கோயில் வளாகத்தில் விரைவில் அத்திமரத்தினால் செய்யப்பட் வராஹி சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருப்பதாக திருக்கழுகுன்றம் வேதமலை வல பெருவிழா குழுவின் நிறுவனா் அன்புச்செழியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன க்காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ளது ஜம்பு மகரிஷி கோயில். இந்த வளாகத்தில் 5 அடி உயரம், 4 அடி அகலத்தில் அத்திமரத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ மகா வராஹி சிலை விரைவில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

அம்மன் திருக்கரங்களில் சங்கு சக்கரம், கலப்பை, தண்டம் ஆகியன அமைந்துள்ளவாறு சிலை வடிவமைக்கப்பட்டு தற்போது திருக்கழுகுன்றம் மலையடிவாரத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்காக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தாா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT