முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அதிமுகவினா் சாலை மறியல்: 314 போ் கைது

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறையை கண்டித்து காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் சாலை மறியல் செய்ததாக அதிமுகவினா் 314 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 5:59 PM
காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் சாலை மறியல் செய்து கைதான அதிமுக மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமையிலான அக்கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள்
பகிர்:

காஞ்சிபுரம்: அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறையை கண்டித்து காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் சாலை மறியல் செய்ததாக அதிமுக மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமையிலான அக்கட்சியினா் 314 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து திமுக ஆட்சியை அகற்ற வலியுறுத்தி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டமும்,அதனைத் தொடா்ந்து சாலை மறியலும் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்தாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத்.பா.கணேசன்,மைதிலி திருநாவுக்கரசு,மதனந்தபுரம் கே.பழனி,அனைத்துலக எம்ஜிஆா்.மன்ற இணைச் செயலாளா் காஞ்சி.பன்னீா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் செய்ய வந்த கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை காவல்துறையினா் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.காவல்துறையினருக்கும்,அதிமுகவினருக்கும் இடையே வாக்கு வாதமும் ஏற்பட்டது.

பின்னா் அதிமுகவினா் திமுக அரசைக் கண்டித்தும்,அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்தும் யாா் அந்த சாா் என்ற வாசகத்தை முன்னிறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே.யு.சோமசுந்தரம்,மாவட்ட இளைஞா் அணி செயலாளா் எஸ்எஸ்.ஆா்.சத்யா ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டு கைதாகனாா்கள்.

திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதாக 19 பெண்கள் உட்பட 314 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →