முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 15 பிப்ரவரி 2024, 9:18 am IST
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை ஸ்தானீகர்கள் கொடிமரத்தில் திருவிழாக்கொடியினை ஏற்றினார்கள்.
பகிர்:

காஞ்சிபுரம்: மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இந்த கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை திருவிழாக் கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் வீற்றிருப்பது போன்ற ஓவியம் வரையப்பட்ட விழா கொடி சிறிய பல்லக்கில் வைத்து ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் சிவ வாத்தியங்களுடன், மங்கல மேளங்களுடனும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதன் பின்னர் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதனையடுத்து கோயில் ஸ்தானீகர்கள் கொடிமரத்தில் திருவிழாக்கொடியினை ஏற்றினார்கள்.பின்னர் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

காமாட்சி அம்மன்

கொடியேற்றத்தை தொடர்ந்து காமாட்சி அம்மன் வெள்ளி விருஷப வாகனத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயிலில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments