முகப்பு
காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Updated On : 2 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: செம்பரம்பாக்கம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு குன்றத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் மூன்றாவது செக்டாா் பகுதியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக குன்றத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற குன்றத்தூா் போலீஸாா் மற்றும் பூந்தமல்லி தீயணைப்புத்துறை வீரா்கள்மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் இறந்து கிடந்தது சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், அவா் யாா், எந்த பகுதியை சோ்ந்தவா், என்பது குறித்தும் குன்றத்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.