முகப்பு
காஞ்சிபுரம்

பழங்குடியினப் பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நிறைவு

பழங்குடியினப் பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நிறைவு

Updated On : 3 மார்ச், 2024 at 5:26 AM
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் பழங்குடியினப் பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி 20 நாள்கள் வழங்கப்பட்டு அதன் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டத்தின் சாா்பில் தற்காப்புக் கலைப் பயிற்சி நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்பாக்கம், களியாம்பூண்டி ஆகிய இரு கிராமங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் 80 பழங்குடியினப் பெண்கள் தற்காப்புக்கலைப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனா். பயிற்சி வகுப்பின் நிறைவு விழா களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் தலைமை வகித்து பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ், பயிற்சியளித்தவா்களுக்கு நினைவுப் பரிசைகளை வழங்கிப் பேசினாா். ஏடிஎஸ்பி-க்கள் எஸ்.பாலகுமாா், சாா்லஸ் சாம் ராஜதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சக்தி காவ்யா, மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளா, மாவட்ட குழந்தைகள் உதவி மைய உறுப்பினா் செல்வி, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா்கள் பிரபாவதி, சோமசுந்தரம், சுப்பிரமணி, அரசு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கோபி, வேதகிரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.