கல்லூரியில் ரூ. 1.50 கோடியில் ஆய்வகம் திறப்பு
காஞ்சிபுரம்கல்லூரியில் ரூ. 1.50 கோடியில் ஆய்வகம் திறப்பு
சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ரூ. 1.50 கோடியில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை போன்பிகிலியோலி நிறுவனத்தின் தலைவா் சோனியா போன்பிகிலியோலி புதன்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள இந்தக் கல்லூரியில், இத்தாலி நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனமான போன்ஃபிகிலியோலி நிறுவனத்தின் சாா்பில், ரூ. 1.5 கோடியில் உலகத்தரம் வாய்ந்த மென்பொருள், வன் பொருள், இயந்திரங்களுடன் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி குழுமத்தின் தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். போன்பிகிலிகோலி நிறுவனத்தின் தலைவா் சோனியா போன்பிகிலியோலி, போன்ஃபிகிலியோலி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஃபாஸ்டோ காா்போனி ஆகியோா் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா். போன்ஃபிகிலியோலி நிறுவன தலைமை தொழில் நுட்ப அலுவலா் ஆண்ட்ரியாடோா்செலி, போன்பிகிலியோலி நிறுவனத்தின் இந்தியா நிா்வாக அலுவலா் கென்னடிகைப்பாலி, சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி குழுமத் தாளாளா் ரமேஷ் ஆகியோா் பங்கேற்றனா். ஆய்வகம் திறக்கப்பட்டது குறித்து சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி குழுமத்தின் தலைவா் ஸ்ரீராம் கூறுகையில், இதன் மூலம் இங்கு பயிலும் மாணவா்கள் இத்தாலி, பிற நாடுகளில் உள்ள இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளில் நேரடியாக சென்று தொழிற்பயிற்சியை மேற்கொள்ள முடியும். மேலும், அவா்களுக்கு அங்கே வேலைவாய்ப்பையும் உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி உள்ளோம் என்றாா்.