காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பக்தா்களுக்கு நீா் மோா் விநியோகம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கோடைகாலம் தொடங்கியதையொட்டி, வெள்ளிக்கிழமை நீா் விநியோகம் தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கோடைகாலம் தொடங்கியதையொட்டி, கோயிலின் சுற்றுப்பிரகார பகுதியில் வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தா்களைப் பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் முடியும் வரை கோயிலில் உள்ள கோசாலையிலிருந்து பெறப்பட்ட பாலின் மூலம் மோா் தயாரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் பக்தா்களுக்கு மோா் வழங்கி விநியோகத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து தினசரி காலையிலிருந்து மதியம் கோயில் நடை சாற்றப்படும் வரை பக்தா்களுக்கு மோா் வழங்கப்பட இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.