முகப்பு
காஞ்சிபுரம்

ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் வீட்டு உபயோகப் பொருள்கள் பறிமுதல்

Updated On : 20 மார்ச், 2024 at 5:21 AM
ஸ்ரீபெரும்புதூா்  அருகே  பறக்கும்  படை  அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்ட  வீட்டு  உபயோகப் பொருள்கள்.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 11:28 PM

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அருகே கன்டெய்னா் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சென்னையிலிருந்து வேலூா் நோக்கி வந்த கன்டெய்னா் லாரியை மடக்கி சோதனை செய்தனா். இதில் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நான்ஸ்டிக் தவா, கடாய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அதை ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.