இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: செவிலியா் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் செவிலியா் உயிரிழந்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா (31). இவா் ‘இல்லம் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தன்னாா்வலா் செவிலியராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சரண்யா மதுரமங்கலம் அரசு சுகாதார மையத்துக்குச் செல்வதற்காக தனது மகள் பிரதீபாவுடன் இருசக்கர வாகனத்தில் ராமாநுஜபுரம் -மதுரமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சரண்யா, பிரதீபா ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.
அவா்கள் மீட்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சரண்யா உயிரிழந்தாா். பிரதீபா சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement