ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயில் தீா்த்தவாரி
ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான புதன்கிழமை தீா்த்தவாரி உற்சவத்தையொட்டி உற்சவா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் சன்னிவாசம் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மற்றும் ராமாநுஜா் அவதார திருவிழா கடந்த ஏப். 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான புதன்கிழமை காலை மட்டையடி உற்சவத்துடன் உற்சவா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் தங்கப் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதையடுத்து பிரணயகலகம் சன்னிவாசம் மற்றும் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. இதில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் சன்னிவாசம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.