பாம்பு கடித்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அடுத்த எறையூா் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த பாம்பு கடித்து வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் சரோஜ் ஸ்வாயின் (21). இவா் ஒரகடம் அடுத்த எறையூா் ராஜகாளியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், சரோஜ் ஸ்வாயின் திங்கள்கிழமை இரவு தான் தங்கியிருந்த வீட்டின் வெளியில் உள்ள திண்ணையில் படுத்து துாங்கிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினா் உதவியுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக சென்றவா் பின்பு ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.