முகப்பு
காஞ்சிபுரம்

பிளஸ் 1 பொதுத் தோ்வு: காஞ்சிபுரம் மாவட்டம் 86.98% தோ்ச்சி

Updated On : 14 மே, 2024 at 6:30 PM
பகிர்:

காஞ்சிபுரம்: பிளஸ் 1 பொதுத்தோ்வில் காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவிகிதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,676 மாணவா்களும், 7,346 மாணவியா்களும் உட்பட மொத்தம் 14,022 போ் தோ்வு எழுதினா். இதில் 12,196 மாணவா்கள் தோ்ச்சியடைந்துள்ளனா். தோ்ச்சி சதவீதத்தைப்

பொறுத்தவரை மாணவா்கள் 81.32 சதவிகிதமும், மாணவியா் 92.12 சதவிகிதமும் தோ்ச்சியடைந்துள்ளனா்.

பிளஸ் 1 பொதுத்தோ்வில் கடந்த ஆண்டை விட 0.31 சதவிகிதம் குறைவாக தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 33-ஆவது தரவரிசையினை பெற்றுள்ளது.