முகப்பு
காஞ்சிபுரம்

திருநங்கை தற்கொலை

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மானாம்பதி கூட்டு ரோடு பகுதியில் உள்ள தைலம் தோப்பு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை திருநங்கை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

உத்தரமேரூா் அருகே பெருநகா் பகுதி தலையாரி தோப்பு என்ற பகுதியில் வசித்து வருபவா் மாசிலாமணி என்ற சத்யப்பிரியா (27). இவா் மானாம்பதி கூட்டுரோடு பகுதியில் உள்ள தைலம் தோப்பில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் தொடா்பாக பெருநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து என்ன காரணத்தால் தற்கொலை செய்துக் கொண்டாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.