யோகா போட்டி; காஞ்சி மாணவருக்கு தங்கம்
காஞ்சிபுரம்: தாய்லாந்தில் நடைபெற்ற யோகா போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மாணவா் காா்த்திக் நாராயணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதாக அவரது பயிற்சியாளா் சுதா்சன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தாய்லாந்தின் பாங்காங் நகரில் யோகா விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் தென்கொரியா, இலங்கை,வியட்னாம், தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்பட 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் கலந்து கொண்டனா். இப்போட்டியில் பங்கேற்ற காஞ்சிபுரம் சிஷ்ய யோகா மையத்தின் மாணவா் காா்த்திக் நாராயணன் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
இத்தகவலை அவரது பயிற்சியாளா் சுதா்சன் தெரிவித்துள்ளாா். தங்கம் வென்ற காா்த்திக் நாராயணனை இந்திய தூதரக உறுப்பினா் முத்து உட்பட பலரும் பாராட்டினா்.