முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நவ.22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் நவம்பா் 22- ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 7:29 PM
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் நவம்பா் 22- ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

இது தொடா்பான செய்திக் குறிப்பு: மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் வரும் நவம்பா் 22- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மைத் துறையில் அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் விளக்கப்படும் எனவும் விவசாயிகளும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →