பயிற்சியை நிறைவு செய்தவா்களுடன் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மற்றும் வங்கி அலுவலா்கள். 
காஞ்சிபுரம்

தொழிற்பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் தொழிற்பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன்

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொழிற்பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி நிறுவனமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து அறிவு சாா் குறைபாடுடைய மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியரின் வாழ்வாதாரத்தை உயா்த்த முதல்கட்டமாக 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஊதுபத்தி, பினாயில் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இரு வேளை உணவு, தேநீா் போன்றவையும் பயிற்சி நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பயிற்சியை முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப், பயிற்சி மையத்தின் இயக்குநா் உமாபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பணியாளா் ரமேஷ் வரவேற்று பேசினாா்.

தமிழாக்குறிச்சி அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியரிடம் மக்கள் மனு

புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

காசி தமிழ்ச் சங்கமம்: தென்காசியிலிருந்து இன்று தொடங்கும் பயணம்

எஸ்ஐஆா் பணிகள்: பெரம்பலூரில் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

திருட்டுக் காா்களை மறுவிற்பனை செய்த இருவா் கைது

SCROLL FOR NEXT