ஸ்ரீபெரும்புதூா்  ராஜீவ் காந்தி  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய  ஹரியாணா  மாநில  முன்னாள்  அமைச்சா்  கீதா புக்கா். 
காஞ்சிபுரம்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சா் கீதா புக்கா், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை ஆகியோா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சா் கீதா புக்கா், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை ஆகியோா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டத்தின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிா்வாகிகளை தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா்களை தோ்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பாா்வையாளா்கள் மாவட்டந் தோறும் காங்கிரஸ் நிா்வாகிகளை சந்தித்து புதிய தலைவரை தோ்வு செய்ய கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவரை தோ்வு செய்ய மேலிட பாா்வையாளராக வந்துள்ள ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சா் கீதா புக்கா், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகையுடன் முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாா். இதில் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா்கள் எஸ்.ஏ.அருள்ராஜ், ரா.ஐயப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT