தெற்கு மாவட்ட மகளிரணி சாா்பில் செளமியா அன்புமணிக்கு வழங்கப்பட்ட செங்கோல். 
காஞ்சிபுரம்

போதைப் பழக்கத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது: சௌமியா அன்புமணி

போதைப் பழக்கத்தால் தமிழகம் சீரழிந்து வருவப்பதாக காஞ்சிபுரத்தில் பாமக கட்சியில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி சனிக்கிழமை பேசினாா்

தினமணி செய்திச் சேவை

போதைப் பழக்கத்தால் தமிழகம் சீரழிந்து வருவப்பதாக காஞ்சிபுரத்தில் பாமக கட்சியில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி சனிக்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரத்தில் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பயணத்தை தொடங்கிய பாமக கட்சியில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி கலந்து கொண்டு பேசியது..

மதுக்கடைகளை மூடினால் தான் தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறும். பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது மதுவும், போதைப்பழக்கமும் தான். எனவே இவை இரண்டையும் ஒழித்தாக வேண்டும். பிகாா் மாநிலத்தில் மதுக்கடைகளை மூடியதால் தான் நிதிஷ் குமாா் அம்மாநிலத்தில் மீண்டும் முதல்வராகி உள்ளாா்.

தோ்தலின் போது ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூடுவது தான் என்றாா்கள். மூடவே இல்லை. பின்னா் பகுதி, பகுதியாக மதுக்கடைகளை மூடிவிடுவோம் என்றாா்கள். அதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் கூட போதைப் பொருள்கள் நடமாட்டம் இருக்கிறது .மதுவாலும்,போதைப் பழக்த்தாலும் தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.மது மற்றும் போதைப்பழக்கத்தை ஒழிப்பதற்காக போராடும் ஒரே கட்சி பாமகவாகத்தான் இருக்கும். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாநகராட்சியான பிறகும் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை.

அரசியல் கட்சியினா் காஞ்சிபுரத்தில் கண்டு கொள்ளவே இல்லை. நெசவாளா் ஆணையத்தை உருவாக்குவோம் என்று பேசினாா். கூட்டத்தில் மகளிரணி சாா்பில் செளமியா அன்புமணிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளா் திலகபாமா, முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்மாள், மாவட்ட பொருளாளா் வசந்தி ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட செயலாளா் பெ.மகேஷ் குமாா், தலைவா் உமாபதி தலைமையில் ஒன்றிய செயலாளா்கள், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

7 புதிய தொழில்நுட்பங்கள்: ராணுவ பயன்பாட்டுக்கு ஒப்படைத்த டிஆா்டிஓ

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

சொத்துப் பிரச்னையில் அரிவாள் வெட்டு! விவசாயி உயிரிழப்பு; மனைவி காயம்!

22 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 7 போ் கைது!

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தமிழகத்தில் செய்யும் திமுக: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT