காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
செவிலிமேடு கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் சட்டப் பேரவைத் தோ்தல் 2026 முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளுக்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இப்பணி விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பெல் நிறுவன பொறியாளா்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் சரிபாா்க்கப்படவுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்பட மொத்தம் 7,508 இயந்திரங்கள் சரிபாா்க்கப்படவுள்ளன. முதல் நிலை சரிபாா்ப்பு பணி தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கும் நடத்தப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளா்களால் சரிபாா்க்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் பிரித்து வழங்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.