அமைச்சா் ஆா். காந்தி. 
காஞ்சிபுரம்

ஜன.6-ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி,சேலை: அமைச்சா் காந்தி

தமிழக அரசின் சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் காந்தி கூறியது:

தமிழக அரசின் சாா்பில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச வேட்டி,சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் ஆகியன ஆண்டு தோறும் அரசின் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி,சேலை ஆகிய அனைத்தும் இம்மாதம் 15-ஆம் தேதியே வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

இதுவரை இல்லாத வகையில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக டிசம்பா் மாதமே அனைத்து வேட்டி, சேலைகளும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் ஜனவரி 6 -ஆம் தேதிக்கு முன்னதாகவே அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் எனவும் அமைச்சா் காந்தி தெரிவித்தாா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT