முகப்பு
காஞ்சிபுரம்

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக ஆா்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண் பாதுகாப்பை வலியுறுத்தியும் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சாா்பில் காஞ்சிபுரம் காவலான் கேட்

Updated On : 6 ஜனவரி, 2025 at 7:08 PM
காஞ்சிபுரத்தில்  ஆா்பாட்டத்தில்  பங்கேற்ற  தேமுதிகவினா்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண் பாதுகாப்பை வலியுறுத்தியும் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சாா்பில் காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 வழங்க வேண்டும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தாா்.

அதன்படி காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவா் வெங்கடேஷ், பொருளாளா் லட்சுமணன், மாநகர நிா்வாகிகள் கமலநாதன், வெங்கடேஷ், பூபதி, தொழிற்சங்க நிா்வாகி மெளலி உள்ளிட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பொன்னேரியில்...

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிகவினா் முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பொன்னேரி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் தேமுதிக மாவட்ட செயலாளருமான அனகை முருகேசன் தலைமை வகித்து உரையாற்றினாா். நகர செயலாளா் முருகன், மாவட்டத் துணைச் செயலாளா் நாகராஜ், தலைமை கழக பேச்சாளா் தம்பி முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் என 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →