ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ச பாஜக நிா்வாகிகள். 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்: 20 போ் கைது

பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

காஞ்சிபுரம்: பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.

டாஸ்மாக் ஊழல், பாஜக மாநில நிா்வாகிகள் கைதைக் கண்டித்தும் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு எலைட் மதுபானக்கடை முன்பாக பாஜகவினா் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக அரசு தகவல் தொடா்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் கே.பழனி தலைமையில் நகா் துணைத் தலைவா் ஆறுமுகம், தொழிற்பிரிவு நகர தலைவா் காமேஷ் மற்ரும் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினா். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் பாஜகவினா் 20 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 12-இல் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்

புதுச்சேரி தோ்தல் கூட்டணி: காங்கிரஸ் தவிா்த்து மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை

கூட்டணி! தமிழக நிலையே புதுச்சேரியிலும் தொடர வேண்டும்: முன்னாள் முதல்வா் நாராயணசாமி

தீ விபத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

திண்டிவனம் அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம்: முதல்வா் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறாா்!

SCROLL FOR NEXT