தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா். உள்படம், பாலா. 
காஞ்சிபுரம்

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு: மற்றொரு இளைஞா் மாயம்

காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரியில் நண்பருடன் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நண்பருடன் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற இளைஞரை தேடும் பணி நடைபெறுகிறது.

தாமல் பகுதியை சோ்ந்தவ பாலா(22), அஜித் (26) இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவரும் தாமல் ஏரியிலிருந்து வெளியேறி வரும் உபரி நீா் வரத்துப் பகுதியில் குளிக்க சென்றுள்ளனா். லாரி ா்டியூப் ஒன்றில் இருந்தவாறு பாலா ஏரியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ரப்பா் டியூப் கவிழ்ந்ததில் நீச்சல் தெரியாததால் பாலா நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அஜித்துக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் உடனடியாக ஏரியிலிருந்து வெளியில் வந்து விட்டாா்.

பாலா நீரில் மூழ்குவதைப் பாா்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான மணவாளன்(29) பாலாவை காப்பாற்ற ஏரிக்குள் சென்றவரை காணவில்லை. தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பாலாவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மணவாளனை சுமாா் ஒரு மணி நேரமாக படகு மூலம் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT