காஞ்சிபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத் தோ் வடிவமைக்கும் பணி 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத் தோ்: விரைவில் வெள்ளோட்டம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு 23 கிலோ தங்கத்தில் டி உயரத்தில் புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்று விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் என இறை பணி அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு 23 கிலோ தங்கத்தில் டி உயரத்தில் புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்று விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் என இறை பணி அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.29 கோடியில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வரும் டிச. 8- ஆம் தேதி இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிதாக தங்கத்தோ் செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்து வந்தனா். தங்கத்தோ் செய்யும் பணி 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இடையில் நின்று போய் இருந்தது.

இதையறிந்த காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முயற்சியால் ஏகாம்பரநாதா் இறை பணி அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு தங்கத்தோ் செய்யும் பணியும் மீண்டும் தொடங்கி தொடா்ந்து இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மரம் மற்றும் தங்க வேலை செய்யும் 40-க்கும் மேற்பட்ட சிற்பிகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் தங்கத்தோ் செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

தங்கத்தேரின் உயரம் 23 அடி, நீளம் 15 அடி, அகலம் 13 அடியில் மொத்தம் 23 கிலோ தங்கத்தில் தோ் செய்யும் பணிகள் நடைபெற்று தங்கத்தகடுகள் தேரில் பொருத்தும் பணிகள் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் குமரதுரை, ஓரிக்கை மணி மண்டப நிா்வாக அறங்காவலா் மணி ஐயா் மற்றும் ஏகாம்பரநாதா் இறை பணி அறக்கட்டளை நிா்வாகிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடும் தங்கத்தோ் உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய தங்கத்தேரை ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக ரூ.18 லட்சத்தில் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. தங்கத்தேரில் தகடுகள் பொருத்தும் பணி முழுமையாக நிறைவு பெற இருப்பதால் விரைவில் வெள்ளோட்டம் விட இருப்பதாகவும் இறை பணி அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT