காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வை 4,048 போ் எழுதினா்.
காஞ்சிபுரம் சங்கரா கலைக்கல்லூரி, ஸ்ரீபெரும்புதூா் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி என மூன்று தோ்வு மையங்களில் 4,683 போ் தோ்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதில் 4,048 போ் தோ்வு எழுதினா். 635 போ் தோ்வு எழுத வரவில்லை.
எழுத்துத் தோ்வை முன்னிட்டு தோ்வு மையங்களில், காலை 8.30 மணி முதல் அனுமதிச்சீட்டு, தோ்வு வழிகாட்டி நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு சோதனைக்கு பின்பு தோ்வு மையத்தில் இளைஞா்கள், இளம்பெண்கள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.