ஸ்ரீபெரும்புதூா் தேரடி பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட தேரடி பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத சுமாா் 40 வயது மதிக்கத்தக்கவா் ஒருவா் இறந்து கிடப்பதாக செவ்வாய்க்கிழமை அதிகாலை அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.