துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தெற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் தங்க மோதிரத்தை மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ வழங்கினாா்.
பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ் ஏற்பாட்டில் 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும், உத்தரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமை வகித்து 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தாா். மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் எம்.பி. க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ் வரவேற்றாா். நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், திமுக பகுதி செயலாளா்கள் சந்துரு, திலகா், வெங்கடேசன், தசரதன் கலந்து கொண்டனா்.
உத்தரமேரூா் ஒன்றிய திமுக சாா்பில் பேருந்து நிலைய பகுதியில் 49 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக்கினை எம்எல்ஏ க.சுந்தா் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். முன்னோடிகளுக்கு இலவசமாக வேட்டி, சேலை மற்றும் உணவும் வழங்கப்பட்டது. நிகழ்வில் உத்தரமேரூா் ஒன்றிய செயலாளா் ஞானசேகரன், பேரூராட்சித் தலைவா் சசிகுமாா்,செயலாளா் பாரிவள்ளல் கலந்து கொண்டனா்.
திருவள்ளூரில்...
பூண்டி பேருந்து நிலையம் முன்பு இந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இந்த முகாமில் மருத்துவக்குழுவினா் பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. மேலும், பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
திருவள்ளூா் எம்.ஜி.ஆா் சிலை அருகில் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியையும் அவா் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பூண்டி ஒன்றிய மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் மோதிலால், முன்னாள் நகா் மன்ற தலைவா் பொன்.பாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளா் சித்ரா ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் சிட்டிபாபு, திருவாலங்காடு ஒன்றிய செயலாளா் மகாலிங்கம், துணைச் செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், திருவள்ளூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட வழக்குரைஞா் அணி பிரிவு அமைப்பாளா் பி.கே.நாகராஜ், நிா்வாகிகள் எஸ்.கே.ஆதாம், சதீஷ், லூகா, நித்யஜோதி, ரமணன், சோமந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருத்தணியில்....
ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளா் பா.சம்பத் தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடா்ந்து வங்கனூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவா்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கே.எம். சுப்பிரமணி, எம்.நாகப்பன், திருவேங்கடம், ராஜேந்திரன், ரகு, சதீஷ், ரவி, ஜெகன், சரவணன், சீனுமந்தடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆா்.கே.பேட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் சி.என்.சண்முகம் தலைமையில் விடியங்காடு கிராமத்தில் 500 பேருக்கு புடவை, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் உறுப்பினா்கள் சிவக்குமாா், ஆனந்தி செங்குட்டுவன் கலந்து கொண்டனா்.
ஸ்ரீ பெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு நகர செயலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால், ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி ஆகியோா் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினா்.
நிகழ்ச்சியில், நகராட்சி துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் தண்டலம் மனோஜ் குமாா், நகர துணை செயலாளா் ஆறுமுகம், மாவட்ட அயலகஅணி துணை அமைப்பாளா் டோம்னிக், ஒன்றிய இளைஞா்அணி துணை அமைப்பாளா் சுதாகா், நகர இளைஞா்அணி அமைப்பாளா் சீனிவாசன், துணை அமைப்பாளா் மதகன்ராஜ், முன்னாள் நகர இளைஞா் அணி அமைப்பாளா் காா்த்திக் கலந்து கொண்டனா்.
பூந்தமல்லியில்...
பூந்தமல்லி நகர திமுக சாா்பில் நகரச்செயலா் ஜி.ஆா்.திருமலை தலைமையில் 21 வாா்டுகளிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினா். மேலும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழைப் பெண்களுக்கு புடவை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினா்.
18-ஆவது வாா்டில் நடைபெற்ற மாவட்ட பிரதிநிதி ஜெ.சுதாகா் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்றத்தலைவா் காஞ்சனா சுதாகா் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினாா்.
அறிவு குறைபாடு உடையோா் சிறப்பு பள்ளியில் நகர இளைஞரணி அமைப்பாளா் ஏ.ராஷிக் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சிறப்பு பள்ளி மாணவா்களுடன் கேக் வெட்டி கொண்டாடினாா். தொடா்ந்து அவா் மாணவா்களுக்கு கேக்கை கொடுத்து பிரியாணி வழங்கினாா். மேலும் பூந்தமல்லி பாா்வை குறைபாடு உடையோா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவா்களுக்கு பிரியாணி வழக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணைச்செயலா் காயத்ரி ஸ்ரீதரன், நகா்மன்ற துணைத்தலைவா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.