முகப்பு
காஞ்சிபுரம்

திருவண்ணாமலை திருக்குடைகள் உபய யாத்திரை காஞ்சிபுரம் வருகை

திருவண்ணாமலை திருக்குடைகள் உபய யாத்திரை காஞ்சிபுரம் வருகை

Updated On : 28 நவம்பர், 2025 at 6:24 PM
காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த சிவனடியாா் லிங்கேசன் ஐயா தலைமையிலான திருவண்ணாமலை திருக்குடைகள் உபய யாத்திரைக் குழுவினா்.
பகிர்:

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலுக்கு திருக்குடைகள் காணிக்கையாக வழங்கும் உபய யாத்திரைக் குழுவினருக்கு காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்து ஆன்மிக சேவா சமிதி அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு தீபத் திருவிழாவின்போது திருக்குடைகள் உபயமாக வழங்குவது வழக்கம். அந்த வகையில், 12-ஆவது ஆண்டு திருக்குடைகள் உபய யாத்திரைக் குழுவினா் வடதிருமுல்லைவாயிலில் அமைந்துள்ள கொடியுடை அம்மன் சமேத மாசிலாமணீஸ்வரா் கோயிலிலிருந்து புறப்பட்டு, பல்வேறு சிவாலயங்களையும் தரிசித்துக் கொண்டே காஞ்சிபுரம் வருகை தந்தனா்.

பெரிய காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணாமலையாா் சிவாலயத்தில் திருக்குடைகள் உபய யாத்திரைக் குழுவினா் வந்ததும் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, குழுவினருக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், காஞ்சிபுரம் ஆழ்வாா் பங்களா பகுதியில் தங்கியிருந்து மீண்டும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றனா். சிவனடியாா் லிங்கேசன் ஐயா தலைமையில் வந்த இந்தக் குழுவினா் திருவண்ணாமலை சென்றதும் அண்ணாமலை யாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் திருக்குடைகளை காணிக்கையாக வழங்கவுள்ளனா். திருக்குடைகள் ஊா்வலத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →