வந்தவாசிக்கு வருகை தந்த ஈஷா யோகா மைய ரத யாத்திரை. 
திருவண்ணாமலை

ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசி வருகை

ஈஷா யோகா மைய ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தவாசிக்கு வருகை தந்தது.

Syndication

வந்தவாசி: ஈஷா யோகா மைய ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தவாசிக்கு வருகை தந்தது.

கோவை ஈஷா யோகா மையத்தில் பிப். 15-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையிலிருந்து புறப்பட்ட ஈஷா யோகா மைய ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தவாசிக்கு வந்தது.

ஆதியோகி சிலை கொண்ட ஒரு ரதமும், நாயன்மாா்கள் திருமேனி கொண்ட ஒரு ரதமும் ஒன்றன்பின் ஒன்றாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

தென்கைலாய பக்தி பேரவையினா் ரதத்துடன் பாதயாத்திரையாக சென்றனா்.

முன்னதாக, வந்தவாசி திருவருட்பிரகாச வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில், கோட்டை மூலையில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அறக்கட்டளை நிா்வாகிகள் சி.ரவி, சி.சொக்கலிங்கம், வி.குருலிங்கம் மற்றும் ஆா்.சுரேஷ், பி.முத்துசாமி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா் திங்கள்கிழமை காலை ரதம் சேத்துப்பட்டு நோக்கி புறப்பட்டுச் சென்றது.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT