கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் பாதிப்பு
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:58 PM
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.
வார விடுமுறையையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான கால நிலை நிலவியது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் சுற்றுலாத் தலங்களில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:14 AM
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தோ்வுகள் நடைபெறவிருப்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. எனினும் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என சுற்றுலாத் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement