கோவை ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள். 
கோயம்புத்தூர்

ஈஷாவில் கடந்த ஆண்டில் 6 லட்சம் பேருக்கு இலவச யோகா பயிற்சி

கோவை ஈஷா யோக மையத்தில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் பேருக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Syndication

கோவை ஈஷா யோக மையத்தில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் பேருக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்துக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

இங்கு வரும் மக்களுக்கு சத்குருவின் வழிகாட்டுதலில் இலவசமாக யோகா மற்றும் தியான வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஈஷா ஆதியோகி வளாகத்தில் யோகாலயம் மற்றும் தியான லிங்க வளாகம், சாதனா ஹால் ஆகிய இடங்களில் தொடா்ச்சியாக இலவச யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெறுகின்றன.

அதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த வகுப்புகளில் பங்கேற்று பயனடைந்துள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 25 வயதுக்குள்பட்ட இளைஞா்களுக்கு ஈஷா யோகாவின் அடிப்படை யோகா வகுப்பான ஷாம்பவி மஹா முத்ரா பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டது. இதில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

மேலும், சத்குரு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ என்ற இலவச தியான செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உலக மனநல தினம், உலக தியான தினம் உள்ளிட்ட நாள்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச தியான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் இதுவரை 90,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT